சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பாரியளவிலான சிகரெட் தொகை இலங்கை சுங்கப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.1 மில்லியன் சிகரெட்டுக்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி 700 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், சுமார் 100 மில்லியன் ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டிருந்ககும் எனச் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.