கொள்கை வட்டி விகிதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

கொள்கை வட்டி விகிதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது அதன் கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) 8.25% ஆகவும், நிலையான கடன் வசதி வீதம் (SLFR) 9.25% ஆகவும் உள்ளதுடன் சட்டப்பூர்வ கையிருப்பு வீதம் (SRR) 2.00% ஆகவும் மாறாமல் உள்ளது.

பொருளாதாரம் அதன் அதிகபட்ச திறனை அடைய உதவும் அதேவேளை பணவீக்கம் நடுத்தர காலத்தில் 05 சதவீத இலக்குடன் சீரமைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படும் பேரின பொருளாதார முன்னேற்றங்கள், உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் உள்ள அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை பரிசீலித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில காலாண்டுகளில் பணவீக்கம், நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 05 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது நிர்வாக ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் மாற்றங்கள் மற்றும் விநியோக நிலைமைகளை எளிதாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் பணசுருக்கத்தை பதிவு செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விகிதங்களை பராமரிப்பதுடன், மொத்த உத்தியோகபூர்வ கையிருப்புகளை (GOR) மேம்படுத்துவதற்காக உள்நாட்டு சந்தையிலிருந்து அந்நிய செலாவணியை மத்திய வங்கி கொள்வனவு செய்கிறது.

2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாத நிலவரப்படி, சீனாவின் மக்கள் வங்கியின் இடமாற்று வசதி உட்பட மொத்த உத்தியோகபூர்வ கையிருப்புகள் 6.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version