ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள் பொது மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள் பொது மக்கள் பாவனைக்கு

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையும் அதனை அண்மித்த பகுதிகளும் இதுவரை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன.

ஆனால் அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனைத்து வீதித் தடைகளும் நீக்கப்பட்டு பல வருடங்களின் பின்னர் அப்பகுதியிலுள்ள வீதிகள் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக உள்ள சேர் பாரோன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை ஆகிய வீதிகளே பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version