லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுடன் தூதராம் நெருங்கிய தொடர்பிலுள்ளதாகவும் தூதுவர் கபில ஜயவீர தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து, லெபனானின் வட பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதனால் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சுமார் 7,600 இலங்கை பணியாளர்கள் லெபனானில் பணிபுரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இலங்கையர்கள் வசிக்கவில்லை என அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.