இந்திய வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வார இறுதியில் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகத்துடன் கலந்துரையாடுவதற்காக நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவர் வருகைத்தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தமிழ்க் கட்சிகளை அழைத்து கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version