தடை உத்தரவு நீடிப்பு

சீனாவின் சேதன பசளைக்கான கட்டணத்தை செலுத்துவதை இடைநிறுத்தி, மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி வரை கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் இன்று (03/12) தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாராச்சி, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

லங்கா உர நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தினால் சீனாவின் சேதன பசளை கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தடை உத்தரவு நீடிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version