
பிரதமர் ஹரிணி அமரசூரிய பொரளை சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இன்று(01.10) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
சிறுவர் தினமான இன்று இந்த கண்காணிப்பு விஜயத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, சிறுவர்களுக்குப் பிரதமர் பரிசில்களை வழங்கியதுடன் சிறுவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் கலந்துரையாடியிருந்தார்.