இந்திய வெளிவிவகார அமைச்சர் – சஜித் இடையே சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் - சஜித் இடையே சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடினார்.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (04.10) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தற்போது நாடு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

ஒரு நாடாக நிலவும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு இந்தியா இதுவரை வழங்கிய மகத்தான ஒத்துழைப்புகளுக்கு இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அவர்
தொடர்ந்தும் எமது நாட்டிற்கு தங்கள் ஆதரவுகளையும் உதவிகளையும் பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், நெருங்கிய அண்டை நாடாகவும் நீண்ட கால நண்பர் என்ற வகையிலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்த உறவு தொடரும் என எதிர்பார்க்கிறேன் என்றும் இதற்கு தன்னாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்குவேன் சஜித் பிரேமதாச இதன்போது உறுதியளித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version