சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் சுதந்திரக் கட்சி

சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் சுதந்திரக் கட்சி

நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை பாராளுமன்ற தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 40 தொகுதி அமைப்பாளர்களை பொதுத் தேர்தலில் களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக கட்சியின் உப தவிசாளர் சட்டத்தரணி கீர்த்தி உடவத்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இம்முறை இருவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் இளம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவத்துக்கு முன்னுரிமை அளித்து அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version