முக்கிய ரயில் மார்க்கத்தை மீள் திறக்கும் பணி தாமதம்

முக்கிய ரயில் மார்க்கத்தை மீள் திறக்கும் பணி தாமதம்

நவீனமயப்படுத்தப்பட்ட மாகோ – அனுராதபுரம் ரயில் மார்க்கத்தைத் திறக்கும் நடவடிக்கை தாமதமடைந்துள்ளது.

குறித்த மார்க்கத்திற்கான சமிக்ஞை கட்டமைப்பு இதுவரை நிறுவப்படாமையே தாமதத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சமிக்ஞை கட்டமைப்பு இன்றி ரயிலைச் செலுத்துவதற்கான இயலுமை இல்லை எனச் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலை தொடர்பில் போக்குவரத்து அமைச்சிற்கும் தெரியப்படுத்தப் பட்டுள்ள நிலையில், உரியத் தரப்பினருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

மாகோ – அனுராதபுரம் ரயில் மார்க்கம் கடந்த ஜனவரி மாதம் முதல் மூடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version