பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

2023ம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி சொத்து விபரங்கள் கோரப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தமது சொத்துப் பிரகடனங்களை வேட்புமனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பட்டியல் வேட்புமனுக்களைக் கோருபவர்களும் தமது சொத்து விபரங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version