எரிவாயு விநியோகம் ஆரம்பம்

இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க பாவனையாளர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. கடுமையான மூன்று நிபந்தனைகளின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விநியோகம் செய்ய முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு “மேர்கப்டன்” இராசயனம் கட்டாயம் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். 100 கொள்கலன்களுக்கு ஒரு கொள்கலன் பரிசோதனை செய்யப்பட்டு குறியீட்டு இலக்கம் பாவனையாளர் அதிகார சபைக்கு வழங்கப்பட வேண்டும்.


ஆகிய மூன்று கடுமையான நிபந்தனைகளின் கீழ் எரிவாயு விநியோகம் இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த மாற்றத்தின் மூலம் கடந்த நாட்களில் ஏற்பட்ட எரிவாயு கொள்கலன் அல்லது அடுப்புகள் வெடித்த சம்பவங்கள் முடிவுக்கு வருமா எனபதனை எதிர்காலத்தில் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

எரிவாயு விநியோகம் ஆரம்பம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version