நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும்
என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (08.10) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
பெரும் போகம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்த வாரம் திங்கட்கிழமைக்குள் இந்த உர மானியம் அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும்.
அதன் பின்னர் பொலன்னறுவை, அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் மகாவலி பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.