நாடாளுமன்றத் தேர்தல் – தபால்மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலவகாசம் நீடிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் - தபால்மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலவகாசம் நீடிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலவகாசம் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில்
எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தபாலில் ஏற்படக்கூடிய காலதாமதங்களையும் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் கவனத்திற்கொண்டு
இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதியன்று தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் உரிய மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும்போது ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்க்கும் நோக்கில்
எதிர்வரும் 09 மற்றும் 10 ஆகிய இரு தினங்களிலும், பூரணப்படுத்திய தபால் வாக்கு விண்ணப்பங்களை தபாலுக்கு ஒப்படைப்பதைத் தவிர்த்து, அவற்றை ஒவ்வொரு மாவட்ட ரீதியாக வேறுபடுத்தி வெவ்வேறு கடிதவுறைகளில் இட்டு உறுதிப்படுத்தும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த காரணத்திற்காகவும் இந்த திகதி இனிமேல் நீடிக்கப்பட மாட்டாது என்பதையும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version