மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் 08 பேர் வேட்பு மனுதாக்கல்

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் 08 பேர் வேட்பு மனுதாக்கல்

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் இன்று (10.10) வீட்டுச் சின்னத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் ஞானமுத்து சிறினேசன், மட்டு. மாநகரசபை முன்னாள் மேயர் தியாகராசா சரவணபவன், ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர் சின்னத்துரை சர்வானந்தன், வைத்தியர் ஸ்ரீநாத், இளைஞர் அணித் தலைவர் கிருஸ்ணபிள்ளை செயோன், அருணாச்சலம் கருணாகரன், திருமதி ஜெயந்தி உட்பட 08 பேர் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

இவர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திலுள்ள வேட்பு மனுதாக்கல் செய்யும் காரியாலயத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version