எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தாம் அரசியலிலிருந்து விலகப் போவதில்லை எனவும் செஹான் சேமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவதற்கு தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியிருந்த போதும், மக்கள் மாற்றத்தைக் கோருவது தெளிவாகப் புலப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திலும் பாராளுமன்றத்திலும் மாற்றத்தைக் கோரும் மக்களின் விருப்பத்திற்கு இணங்க, பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த முறை அனுராதபுர மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிய செஹான் சேமசிங்க, தொடர்ந்தும் அனுராதபுர மக்களுக்கு பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நாட்டிற்குத் தேவை ஏற்படும் போது நிபந்தனையற்ற ஆதரவினை வழங்குவதாகவும் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உறுதியளித்துள்ளார்.