இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கான இலங்கையின் அபிவிருத்தி இற்றைப்படுத்தல் அறிக்கை
உலக வங்கியால் வெளியிடப்பட்டது.
இதன்படி,இலங்கையின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் 4.4 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் கடந்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு, ஏற்றுமதியை அதிகரித்தல், வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தல், பெண் தொழிலாளர் பங்கேற்பை அதிகரித்தல், உற்பத்தித்திறனை மேம்படுத்தல், வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் நிதித் துறையில் உள்ள பாதிப்புகள் போன்ற சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட முக்கிய சீர்திருத்தங்கள் நிலையான வளர்ச்சியை அடைவதற்கு முக்கியமானவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.