முக்கிய வீதியினூடான போக்குவரத்துக்குத் தடை

முக்கிய வீதியினூடான போக்குவரத்துக்குத் தடை

நாட்டில் நிலவும் மழையுடனான வாநிலை காரணமாகக் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் குறித்த வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடுவெல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரைத் தேடும் பணிகளை நவகமுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இன்று (11.10) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் 239 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version