புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவுறுத்தல் இன்று சனிக்கிழமை காலை 08.30 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வப்போது மிகவும் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இதேவேளை, காலி மற்றும் மாத்தறை ஊடாக கொழும்பு வரையான ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2.5-3.0 மீற்றர் வரை அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் மற்றும் மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.