அரையிறுதி வாய்ப்பை நெருங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர்

அரையிறுதி வாய்ப்பை நெருங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர்

2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு(12.10) நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி பங்களாதேஷ் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் சார்பில் சோபனா மோஸ்தரி 38(43) ஓட்டங்களையும், நிகர் சுல்தானா ஆட்டமிழக்காமல் 32(38) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

107 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 17.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. 

இதன்படி, தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியீட்டியது. 

குழு Bயில் உள்ள நியூசிலாந்து மகளிர் அணி பங்கேற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றியீட்டி, புள்ளி பட்டியலில் முதலாம் இடத்திலுள்ளது.

அரையிறுதி வாய்ப்பை நெருங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர்

Social Share

Leave a Reply