புங்குடுதீவில் கனேடிய தூதுவர்

புங்குடுதீவில் கனேடிய தூதுவர்

யாழ் புங்குடுதீவு பகுதிக்கு விஜயம் செய்த கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸ், அப்பகுதி  மக்களைச் சந்தித்து  உரையாடியதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.

நேற்று(12.10) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தீவக மக்களாகிய தாங்கள் நீண்டகாலமாக எதிர் நோக்கும் போக்குவரத்து பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு  விடயங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த மக்கள் சந்திப்பின் போது சிவில் சமூகம், மீனவ சமூகம், தீவகத்தின் பெண்கள் வலய அமைப்பு மற்றும் ‘மெசிடோ’ நிறுவனத்தின் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply