இணையவழி நிதி மோசடி: மற்றுமொரு சீனக்குழுவும் சிக்கியது

இணையவழி நிதி மோசடி: மற்றுமொரு சீனக்குழுவும் சிக்கியது

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 சீனப் பிரஜைகளைக் கொண்ட மற்றுமொரு குழு கைது செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, வெலிக்கடை பகுதியில் நேற்று(13.10) குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 15 கணினிகளும், 15 கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நேற்று முன்தினம்(12.10) கண்டி – குண்டசாலையில் உள்ள சுற்றுலா விடுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 126 சீன பிரஜைகளும், கடந்த 6ம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தின் இரு இடங்களிலிருந்து 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகளும், கடந்த 7ம் திகதி நாவல பிரதேசத்தில் 19 சீன பிரஜைகளும், கடந்த 10ம் திகதி பாணந்துறையில் 20 சீன பிரஜைகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Social Share

Leave a Reply