தரம் 5 புலமைப்பரிசில் சர்ச்சை: இறுதி தீர்மானம் அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் சர்ச்சை: இறுதி தீர்மானம் அறிவிப்பு

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளிலிருந்த மூன்று வினாக்கள் கசிந்தமை தொடர்பில், நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பரீட்சை திணைக்களம் இறுதித் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்த போதும், பரீட்சையினைமீண்டும் நடத்தாமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும், கசிந்ததாகக் கூறப்படும் மூன்று வினாக்களுக்கும் முழு புள்ளிகளையும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply