புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு - உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை இரத்து செய்யுமாறு கோரி 27 மாணவர்கள் அவர்களது பெற்றோருடன் இணைந்து உயர் நீதிமன்றத்தில் இன்று(15.10) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர,
பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் 03 வினாக்களே வௌியாகியிருந்ததாகவும் அவற்றுக்கான புள்ளிகள் வழங்கப்படும் என்றும் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று(14.10) தெரிவித்திருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version