தரம் 5 புலமைப்பரிசில் சர்ச்சை: பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் சர்ச்சை: பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு

இடைநிறுத்தப்பட்டுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டிற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளின் சில கேள்விகள் கசிந்த குற்றச்சாட்டுத் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று(15.10) அடிப்படை உரிமை மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version