ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் – தனியார் மயப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் - தனியார் மயப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொட தெரிவித்துள்ளார்.

அதிக இலாபம் ஈட்டும் விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை மாற்றுவதற்கு தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

TTG ஏசியாவிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2030 ஆம் ஆண்டுக்குள் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்திற்காக, விமான சேவையை விற்பனை செய்யும்
நோக்கத்தை கைவிட்டு, இந்த விமான சேவையை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சரத் கனேகொட தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version