இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000க்கு அதிக முறைப்பாடுகள்

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000க்கு அதிக முறைப்பாடுகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குப் பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றுள் 811 முறைப்பாடுகளை விசாரணை செய்யுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதுடன், சுற்றிவளைப்பில் 67 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 20 பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

கிடைத்த 620 முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் சட்டத்திற்குப் புறம்பான வகையில் அமைந்துள்ளதால் அவை உரிய நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version