இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையில் ஆண்டுதோறும் பழைய இரும்புகள் அதிகளவில் திரள்கின்றதுடன், தற்போது திரண்டுள்ள பழைய இரும்புத் தொகையைச் சர்வதேச போட்டி விலைமுறி கோரல் முறைமையைப் பின்பற்றி வெளியகற்றுவதற்காக கடந்த ஜூன் மாதம் 6ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான மூலப்பொருள் பற்றாக்குறைக்குத் தீர்வாக அவர்களுக்கும் போட்டி விலைமனுக்களைச் சமர்ப்பித்து பழைய இரும்புகளைக் கொள்வனவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் தேசிய போட்டி விலைமுறி கோரல் முறையைப் பின்பற்றுவது பொருத்தமானதெனக் அரசாங்கத்தினால் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கிணங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.