முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்ட கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்ட கைது

UPDATE: சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளியூ வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(23.10) வாக்குமூலம் வழங்க சென்ற முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால், அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(23.10) பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளியூ வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதாதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(23.10) முன்னிலையாகியிருந்தார்.

குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பில் தன்னை கைது செய்வதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு நேற்று(22.10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கத் தயார் என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

அண்மையில் கொழும்பு தனியார் ஹோட்டல் வாகன தரிப்பிடதிலிருந்து BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட குறித்த காரை பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply