அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள கடற்கரைப் பிரதேசமான அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்களால் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று இருப்பதாகவும் அதில் இஸ்ரேலியர்கள் வசித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாகவும்
அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிழக்கு மாவட்டத்திற்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர் அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.