அறுகம்பையிலுள்ள சுற்றுலாத் தளங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இரகசிய அறிக்கையொன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பயங்கரவாத விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான மூவரும் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன்
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறித்த அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளனர்.
இதனை பரசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் முன்வைக்குமாறு உத்தரவிட்டார்.