ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அண்மையில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

ரயில் திணைக்களம் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதாகக் கூறுகின்ற போதிலும்,
வேறு சில காரணங்களினால் காலம் தாழ்த்தப்படும் நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை உரிய தீர்வு முன்வைக்கப்படாவிடின், செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க உள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version