இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் தட்டம்மை தடுப்பூசி திட்டம்

இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் தட்டம்மை தடுப்பூசி திட்டம்

இன்று (04.11) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விசேட தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சில பிரதேசங்களில் அம்மை நோயாளர்கள் பதிவாகியிருந்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

” இளைய தலைமுறையினரில் குறிப்பாக இதற்கு முன்பு தட்டம்மை தடுப்பூசி பெறாதவர்கள், அல்லது பெரும்பாலும் தவறியவர்கள், தட்டம்மை தடுப்பூசியிலிருந்து முழு பாதுகாப்பைப் பெறாதவர்கள் அல்லது ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என தொற்றுநோயியல் நிறுவகத்தின் தலைமை தொற்றாநோய் வைத்திய நிபுணர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் தட்டம்மை தடுப்பூசி மூலம் கடந்த 10-20 ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன் மூலம் அம்மை நோயை முழுமையாக ஒழிக்க முடிந்தது.

ஆனால், பிற நாடுகளில் இருந்து நமது சுற்றுச்சூழலில் தட்டம்மை வைரஸ் நுழைந்தால், அது அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

அந்த ஆபத்தை குறைக்கும் நோக்கத்திற்காகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version