கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்றைய தினம் 12 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் அந்த சபை தெரிவித்துள்ளது.
இதன்படி ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபைகளுக்குட்பட்ட பகுதிகள், கட்டான, மினுவாங்கொடை பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகள், நீர் விநியோகம் தடைப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜா-எல, கம்பஹா ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.