தன்னை கொலை செய்ய சதித்திட்டம் – முன்னாாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு

தன்னை கொலை செய்ய சதித்திட்டம் - முன்னாாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல் தன்னையும் கொலை செய்வதற்கு
சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் நான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்,
கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி நான் மாத்திரமே.

2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், விடுதலைப் புலிகள் அமைப்பு, தான் ஓய்வு பெற்றாலும் கொலை செய்வோம்
என பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதாக பொலிஸ் புலனாய்வு அறிக்கைகள் மூலம் தனக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி, கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வழங்கிய கடிதத்தில், தனது பாதுகாப்புப் பிரிவினரின்
எண்ணிக்கையை 50 இல் இருந்து 30 ஆக குறைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 243, 200 மற்றும் 109 பேர் பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த அளவுகோலின் அடிப்படையில் தனக்கு மாத்திரம்
30 பாதுகாவலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டது என்பது தொடர்லி குழப்பமடைந்துள்ளேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 63 இராணுவ அதிகாரிகளும், 180 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 243 பாதுகாப்பு அதிகாரிகளும்,
உள்ளனர்.

மைத்திரிபால சிறிசேனவிடம் 109 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 200 பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளதுடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் 175 இராணுவ அதிகாரிகளும், 25 பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version