மட்டக்களப்பில் தொடர்ந்தும் அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்!

பாராளுமன்ற தேர்தல் 2024 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 05 திகதி மதியம் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 118 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 118 முறைப்பாடுகளில் 84 முறைப்பாடுகளிற்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன் மிகுதி 34 முறைப்பாடுகள் தொடர்பான விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டவிரோத சுவரொட்டிகள், பாதாதைகள் காட்சிப்படுத்தல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதி மீறல் அடிப்படையில் சாதாரண தரமுடையவை என தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version