முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று(06.11) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“முன்னாள் ஜனாதிபதிகள் குறிப்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாவலர்கள் 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்திருந்தார். அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அவருக்கு தற்போது 57 பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.
ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 243, 200 மற்றும் 109 பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த அளவுகோலின் அடிப்படையில் தனக்கு மாத்திரம் 30 பாதுகாவலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டது என்பது தொடர்பில் குழப்பமடைந்துள்ளேன் என சந்திரிக்கா தெரிவித்திருந்த நிலையில்
அதற்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.