ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்கும் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்கும் - சஜித்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்று, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்கி, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்போடு செயற்படுவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று(06.11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போதைய ஜனாதிபதியால் மேடைக்கு மேடை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி தனது வாக்குறுதிகளை ஒருபோதும் மீறாது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனக்கு அதிகாரம் கிடைத்ததும் வரிச்சுமை, எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம், அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு என்பவற்றை மேற்கொள்வேன் எனத் தெரிவித்தாலும், இன்று எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கடவுச்சீட்டு வரிசையும் குறையவில்லை.

ஜனாதிபதி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அடிமையாகி, முதலாளித்துவ செல்வந்த வர்க்கம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் விலையை குறைத்துள்ளார். சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருளுக்கான விலையை அவர் குறைக்கவில்லை. சாதாரண மக்கள் பக்கம் நிற்பதாக கூறும் ஜனாதிபதி இன்று முதலாளித்துவ வர்க்கத்திற்காக முன்நிற்கின்றார்.

இந்த ஜனாதிபதியும் ஏமாற்று வேளை செய்து வருகிறார். எதையும் சாதிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய போதிலும், அந்த பேச்சுவார்த்தைகள் கூட தோல்வியடைந்து, சர்வதேச நாணய நிதியத்தின் அடிமையாக மாறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நாட்டையும் மக்களையும் பிரச்சினையில் சிக்க வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றதால், நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் உடன்படிக்கையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரவேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version