அரிசி மற்றும் நெல் கையிருப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரிசி மற்றும் நெல் கையிருப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரிசி மற்றும் நெல் இருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று (07.11) கையளிக்கப்பட்டது.

இது தொடர்பான ஆவணத்தை வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக இலங்கை சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து அரிசிக்கு தட்டுப்பாடும் நிலவியது.

இதன்பின்னர் ஜனாதிபதி, பாரிய அரிசி வியாபாரிகளை அழைத்து கலந்துரையாடியதோடு, தற்போது சில்லறை சந்தையில் பேணப்பட்டு வரும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அவ்வாறே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய அரிசி இருப்புக்கள் தொடர்பில் விசேட கணக்கெடுப்பை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version