3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நீதிமன்றங்கள் ஊடாக 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள்
இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சாரதிகள் ஈடுபட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போதே இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version