
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
அறுவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (08.11) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தப்பளை பிரதான நகரிலிருந்து கொங்கோடியா பகுதிக்கு மர்க்கறி ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார்
30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த அறுவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.