இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று(10.11) காலை வந்தடைந்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய கடற்படையால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

67.5 மீட்டர் நீளமான ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் 53 பணியாளர்களுடன் நாட்டை வந்தடைந்தது.

அவர்கள் நாட்டின் முக்கியத்துவம் மிக்க பல இடங்களைப் பார்வையிடவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version