ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினமும் (07/12) பாராளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (04/12) இதேபோன்று பாராளுமன்ற அமர்வை புறக்கணித்திருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவிற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு தாக்க முற்பட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
இதேவேளை நேற்றைய தினம் (06/12) போல இன்றைய தினமும் பாராளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ள எதிர்க்கட்சியினர் கறுப்பு பட்டிகளை அணிந்தும், ‘சமையலறையில் கேஸ் இல்லை, நாட்டிற்கே மின்சாரம் இல்லை, வயிற்றுக்கு சாப்பாடு இல்லை, அரசாங்கத்திற்கு மூளை இல்லை’ போன்ற பதாகைகளை ஏந்தியும் பாராளுமன்றில் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும் தற்சமயம் பாராளுமன்ற வளாக வீதிக்கு அண்மையில் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
