மட்டக்களப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்

மட்டக்களப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்

பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மத்திய வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து 442 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள இன்று (13.11) காலை முதல் எடுத்துச் செல்லப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியில் 123 வாக்களிப்பு நிலையங்களும், மட்டக்களப்பு தொகுதியில் 197 வாக்களிப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 122 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் 46 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன.

இதில் சாதாரண வாக்கெண்ணுவதற்காக 37 நிலையங்களும், தபால் மூல வாக்கெண்ணுவதற்காக 9 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்களும் 1917 பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 87 விசேட கண்காணிப்பு பொலிஸ் பிரிவினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version