நாட்டு மக்களிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை

நாட்டு மக்களிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை

இலங்கையின் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் இன்று நடைபெற்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமது வாக்கை, பஞ்சிகாவத்தை அபேசிங்கராமய விகாரையில் நிறுவப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் (14.11) அளித்தார்.

இதன்பின்னர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

தமது கட்சிக்கு இந்த தேர்தலில் வெற்றி கிடைக்கும்.

தமது வெற்றியைத் தொடர்ந்து ஏனைய கட்சி ஆதரவாளர்களுக்கோ உறுப்பினர்களுக்கோ பாதிப்பு ஏற்படாதவாறு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த தேர்தலுக்கான பிரசாரம், இலங்கையின் வரலாற்றில் மிகவும் அமைதியான, ஜனநாயக ரீதியில் இடம்பெற்றது. இது நமது நாட்டு மக்களுக்கு கிடைத்த அரசியல் வெற்றியாகும்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version