பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மாவட்ட ரீதியில் வெளியாகி நிறைவடைந்துள்ள. 61.5 சதவீத வாக்குகளை பெற்று ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை வெற்றி பெற்று 18 தேசியப்பட்டியல் ஆசனங்களுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தேசியப்பட்டியல் ஆசனங்கள் மூலம் 2/3 பெரும்பான்மையையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 17.66 சதவீத வாக்குகளை பெற்று 35 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. தேசியபட்டியில் மூலம் 5 ஆசனங்களை பெற்று 40 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 1 தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தை பெற்று மொத்தமாக 8 ஆசனங்களை வென்றுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி 05 ஆசனங்களை வென்றுள்ளது. இவற்றில் 2 ஆசனங்கள் தேசியப்பட்டியல் மூலம் கிடைத்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு தேசியப்பட்டியில் ஆசனம் அடங்கலாக இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது. இவற்றில் ஒரு தேசியப்பட்டியல். ஐக்கிய தேசியக் கட்சி நுவரெலியாவில் ஒரு ஆசனத்தை வென்றுள்ளது. வன்னியில் இலங்கை தொழிலாளர் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தலா ஒவ்வொரு ஆசனத்தையும், யாழ்ப்பாணத்தில் வைத்தியர் அர்ச்சுனா தலைமையிலான சுயேட்சைகுக்குழு 17 மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தையும் வென்றுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்லைமாவட்டத்தில் ஒரு ஆசனத்தை வென்றுள்ளது. இலங்கை சர்வஜன அதிகாரம் கட்சி தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தை வென்றுள்ளது.
முழுமையான விபரங்கள் கீழுள்ளன