பொதுத் தேர்தல் ஊடாக இம்முறை அதிக எண்ணிக்கையிலான பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகியுள்ளனர்.
இதனிடையே இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 21 பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகியுள்ளனர்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ஹரினி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசேகர ஆகியோரும் கம்பஹா மாவட்டத்திலிருந்து தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ஹேமாலி குணசேகர நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகியுள்ளனர்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட நிலந்தி கொட்டஹச்சி, ஓஷனி உமங்கா ஆகியோரும்
கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட துஷாரி ஜயசிங்கவும் தேர்வாகியுள்ளதுடன்
ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிட்ட சமிந்திராணி கிரியெல்லவும் தேர்வாகியுள்ளார்.
இதேவேளை, மாத்தளை மாவட்டத்திலிருந்து, தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட தீப்தி வாசலகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரோஹினி குமாரி கவிரத்னவும் தேர்வாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அனுஷ்கா தர்ஷனி திலகரத்ன மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் காலி மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட ஹசாரா லியனகேவும், மாத்தறை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவாகியுள்ளார்.
இதேவேளை தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட நிலுஷா லக்மாலி இரத்தினபுரி மாவட்டத்திலிருந்தும், சாகரிக்கா கங்காணி கேகாலை மாவட்டத்திலிருந்தும் நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகியுள்ளனர்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து முது ரத்வத்தே, குருணாகல் மாவட்டத்திலிருந்து கீதா ஹேரத், புத்தளம் மாவட்டத்திலிருந்து ஹிருனி மதுஷா விஜேசிங்க மற்றும் மொனராகலை மாவட்டத்திலிருந்து சதுரி கங்காணி ஆகியோரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட அம்பிகா சாமுவேலும்
நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.