எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் – ஜனாதிபதி

எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் - ஜனாதிபதி

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதே அளவானது எனவும், அதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

குறிப்பாக இலங்கை அரசியலில் மிகவும் முக்கியத்துவமான திருப்புமுனை செப்டம்பர் 21 ஆம் திகதி நிகழ்ந்தது. நீண்டகாலம் எமது நாடு பயணித்த பாதையை மாற்றியமைப்பதற்கு மக்கள் செப்டம்பர் 21 ஆம் திகதி தீர்மானம் எடுத்தனர். அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் செப்டம்பர் 21 ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த மாற்றத்திற்காக எமது நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் வடக்கிற்கு எதிராக தெற்கு அரசியலும் தெற்கிற்கு எதிரான வடக்கு அரசியலும் தான் அரசியல் வரைபடத்தில் பொதிந்திருந்தது. அல்லது ஒவ்வொரு மக்கள் குழுக்களிடையில் சந்தேகம் அவநம்பிக்கை, குரோதம் என்பவற்றை தூண்டும் அரசியலே காணப்பட்டது.

ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், இனியும் எமது நாட்டுக்கு பிரித்தாலும் அரசியல் செல்லுபடியற்றது என்பதை காட்டுகிறது. வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை ஒரே மையப்புள்ளியில் இணைக்க இந்தத் தேர்தலால் முடிந்துள்ளது. அதற்காக தேசிய மக்கள் சக்திக்கு பலம் வாய்ந்த மக்கள் ஆணையை வழங்குவதற்காக ஆர்வம் காட்டி அர்ப்பணித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

ஜனநாயகத்தை முடக்குவதை எந்த அரசியல்வாதியும் விரும்புவர் என்று கருதவில்லை. இவ்வாறான சாதகமான விடயங்கள் அனைத்து பிரஜைகளின் மனங்களிலும் பொதிந்துள்ளது.

எமக்கு வாக்களித்தவர்கள் சாதகமான விடயத்தை தேர்தலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர். எமக்கு வாக்களிக்காதவர்களிடமும் எமது எதிர்பார்ப்புகள் உள்ளன என நாமும் முழுமையாக நம்புகிறோம். எனவே இனியும் இந்தத் தேர்தலில் மகிழ்ச்சி அடையும் குழு மற்றும் இந்தத் தேர்தலினால் விரக்தியடைந்த குழு என இரண்டு குழுக்கள் நாட்டில் இல்
லை.

தேசிய மக்கள் சக்தியின் மூலம் இந்த நாடு விரும்பிய இலக்குகளை அடைவதற்கு இந்த மக்கள் அனைவரின் ஆதரவும் நம்பிக்கையும் எங்களுக்குத் தேவை. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும், இந்த நாட்டில் ஜனநாயகத்தை எவ்வாறு அமைதியான முறையில் நிலைநிறுத்துவது, மற்றவர்களின் அரசியல் உரிமைகளை எவ்வாறு மதிப்பது என்பதை நாம் தேர்தல் முடிவுகளின் பின்னர் காட்டியுள்ளோம்.

இந்நாட்டு மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக நான் கருதுகிறேன். ஆனால் அந்த அனுபவம் நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எதிர்பார்க்கும் அனுபவம் என்று நாங்கள் கருதுகிறோம். அத்துடன், பொதுத் தேர்தலின் பின்னரும், தேர்தல் காலத்திலும் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எமது ஆட்சியி
ல் வாய்ப்பளிக்கப்பட்டது. அது அவர்களின் உரிமையாகும். அத்துடன், இத்தேர்தல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலாகும்.

இத்தேர்தலில் பல தனித்துவங்கள் உள்ளன, அளவுரீதியாக நோக்கினால் , இலங்கை வரலாற்றில், பொதுத் தேர்தலொன்றில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது.அரசியல் கட்சியென்ற ரீதியில் பெற்ற பாரிய வெற்றியாகும். தேர்தல் வரலாற்றில் ஒரு அரசாங்கம் அடைந்த முதல் வெற்றியாகும். மறுபுறம், இது மக்கள் மகிழ்ச்சியடையக் கூடிய வெற்றியாகும். அவ்வாறான வெற்றியொன்று நமக்கும் நமது குடிமக்களுக்கும் எப்படி கிடைத்தது. நம் நாட்டிற்கு அந்த மாற்றங்கள் தேவை.

நமது நாட்டுக்கு பல்வேறு வகையான வெற்றிகள் கிடைத்த போதெல்லாம், நமது பொதுவான இயல்பு தோல்வியுற்றவரின் அல்லது மற்ற தரப்பினரின் மனதை நோகடிக்கும் மற்றும் காயப்படுத்தும் வரலாற்றைக் கண்டுள்ளோம். ஆனால் இந்த தேர்தலின் பின்னர் நிரந்தரமாக புதிய அரசியல் கலாசாரத்தை எமது நாட்டுக்கு உருவாக்கியுள்ளோம். பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அதனை தொடர்ச்சியாக நாங்கள் பாதுகாத்துள்ளோம்.

சம்பவங்கள் நடக்கலாம். மற்றொரு கட்டத்தில், அமைதியான ஜனநாயகம் இருக்கலாம். மற்ற சமயத்தில், மோதல் நிலைமை இருக்கலாம். ஆனால் அவை மீண்டும் மீண்டும் நிகழும் போது மட்டுமே அது சரி செய்யப்படுகின்றன. எனவே, இந்த ஜனநாயகத்திற்காக நாம் திறந்துள்ள கதவுகளும், பொதுமக்களுக்கிருக்கும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கா
ன நமது கடமையும் ஓரிரு சந்தர்ப்பங்களுக்கு மட்டுப்படுத்தினால் அவை வெறும் நிகழ்வுகளாக மாறிவிடும்.

ஆனால் அதனை தொடர்ச்சியாக பேணினால் அவை வெறும் சம்பவங்களாக மாறிவிடாது. எனவே, இந்த ஜனநாயகத்தில், குடிமக்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்து, அவர்களை உயர் நிலைக்குக் கொண்டு வருவது நமது பொறுப்பாகும் . இது அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு என்று நான் கருதுகிறேன்.

குறிப்பாக இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்தனர். தேர்தல் வரலாற்றில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டிய மற்றொரு சந்தர்ப்பம் இருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை மிஞ்சும் வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் தலையீடும் பங்களிப்பும் செயற்பாடும் இத்தேர்தலில் கொடுக்கப்பட்டதாகவே கருதுகிறேன்.

அவர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்தாலும் இந்தத் தேர்தல் முடிவுகளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடியதை நாம் அறிவோம். அவர்களுக்கு நாம் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்.பொதுவாக தேர்தலின் போது அரசியலின் மிக முக்கியமான பகுதி நமது கருத்தையும் நிலைப்பாடுகளையும் சமூகத்திற்கு எடுத்துச் செல்வது
என்பதை நாம் அறிவோம். அதனைச் சமூகத்திற்குக் கொண்டு செல்வதில் ஒரு அரசியல் இயக்கமாக நாங்கள் சில பணிகளைச் செய்தோம். சமூக ஊடகங்களில் அந்தப் பொறுப்பை தானாக முன்வந்து முன்னெடுத்த புதிய தலைமுறையொன்றும் இருந்தது. அந்த இளம் தலைமுறையினரின் விசேட எதிர்பார்ப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் வெறும் பந்தயம், போட்டி, வெற்றி தோல்வியை பகிர்ந்து கொள்ளும் போட்டி என்பன வெளிப்படுத்தப்படவில்லை. இது புதிய இளைஞர் தலைமுறையின் எதிர்பார்ப்புகளையும் இலக்குகளையும் வெளிக்காட்டியது. எனவே நாம் அதற்கு கடப்பட்டுள்ளோம். அது முக்கியமானது என்று நான் கதுதுகிறேன். எனவே, இந்த வெற்றியை அடைய பல்வேறு வழிகளில் உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒருவிடயம் இருக்கிறது. பெரும் நம்பிக்கையுடன் இந்த மக்கள் எழுச்சி பெற்றதன் இரகசியம் என்ன? நீண்டகாலமாக எமது நாட்டுக் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்தனர். நம் நாட்டின் குடிமக்கள் சட்டத்தின் முன் அநாதரவாகவும் ஒடுக்கப்பட்டும் இருப்பது வழமையான காட்சியாகும். மேலும் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கப்பட்ட ஒரு குழுவினர் உள்ளனர். பொருளாதாரத்தில் அவர்கள் மனிதத் தூசியாகி விட்டனர். போதிய உணவின்றி, சரியான வீடின்றி, ஆரோக்கியமாக வாழ வாய்ப்பில்லாமல் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் குழுவொன்று உள்ளது.

மேலும், அவர்கள் தங்கள் அறிவையும் திறனையும் தங்கள் ஈடுபட்டுள்ள தொழிலில் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியுமா? எனவே தொழில் வல்லுநர்கள் தங்கள் தொழில்துறையில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அழுத்தங்களை எதிர்கொண்டனர் .

மேலும், தாம் பேசும் மொழியின்படி, பின்பற்றும் மதத்தின்படி, அவர்களின் கலாச்சாரத்தின்படி ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் இருந்தது. எப்போதும் தாம் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டதாக நினைக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் ஒதுக்கப்பட்ட மக்கள் என்று நினைக்கிறார்கள்.அவர்கள் இலங்கையில் சம உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் குழுவென கருதுகிறார்கள். எனவே, அத்தகைய துன்புறுத்தல் இருந்தது.

ஒவ்வொரு துறையிலும் உள்ள மக்கள் குழுக்களை அவதானித்தால், அவர்களுக்கே உரித்தான, அவர்களுக்கே தனித்துவமான பல அடக்குமுறைகளை பொதுமக்கள் எதிர்கொண்டனர். சட்டத்தை அமுல்படுத்த முயலும் அரச அதிகாரிகள் இந்த அடக்குமுறைக்கு பலியாகி இருப்பதை நான் அறிவேன். அதுதான் உண்மை நிலை. எனவே, இந்தத் தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்தின் அழைப்பாகும். அவர்கள் இந்த சுதந்திரத்தை எதிர்பார்த்தனர். இந்த பல்வேறு வழிகளிலுமான அடக்குமுறைகளில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும். இந்த தேர்தல் முடிவு சுதந்திரத்தின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. எனவே அந்த குடிமக்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தை மட்டுப்படுத்த எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, ஒவ்வொரு துறையிலும் முழு சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.

தொழில் வல்லுநர்களாகிய நாம் அவர்களின் அறிவுக்கு ஏற்ப தங்கள் பங்கை சரியாகச் செய்ய வழங்கப்படும் சுதந்திரம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளுக்கு அவர்களின் பங்கைச் செய்ய நாம் வழங்கும் சுதந்திரம், பொருளாதாரத்தில் நியாயமான பங்கைப் பெறுவதற்கு நாம் வழங்கும் சுதந்திரம், தமது மதம், மொழி மற்றும் கலாச்சாரத்தின் படி நாம் வாழ்வதற்கான உரிமை போன்ற அனைத்தையும் நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். அதனால்தான் இலங்கையை மறுமலர்ச்சி யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறோம்.

இந்த நாட்டு மக்களுக்கு இதனை விட சுதந்திரமான சூழலை உருவாக்க வேண்டும். இந்த வெற்றியை அடைவதில் பொது மக்களின் பெரும் ஈடுபாடு இருந்ததை நாம் அறிவோம். எங்களுடைய அரசியல் இயந்திரத்துடன் தொடர்பில்லாத, எங்களைச் சந்திக்காத, எங்களுடன் கதைக்காத, ஊர், இடம் தெரியாத ஏராளமான மக்கள் எங்களுக்காகப் பாடுபட்டனர். பஸ்ஸில்,
ரயிலில், பணியிடத்தில், நிகழ்வுகளில் எங்கள் வெற்றிக்காக பெருமளவானவர்கள் பங்களித்தனர். இந்த வெற்றிக்காக நாங்கள் நீண்ட காலமாக போராடினோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல தசாப்தங்களாக போராடினோம்.

இங்குள்ள பலர் தங்கள் இளமைக் காலத்திலிருந்தே இந்தக் கனவுக்காகப் போராடியதை நான் அறிவேன். இந்தப் போராட்டத்தில், அவர்களின் நேரத்தையும் உழைப்பையும் மட்டுமல்ல, இந்த வெற்றிக்காக அவர்களின் உயிரையும் கூட தியாகம் செய்தனர். அது மட்டுமின்றி, ஆரம்பத்தில் மிகவும் கடினமான சந்தர்ப்பங்களில் இந்த இயக்கத்தைப் பாதுகாக்
க தலையிட்டோம். சிலர் நடுவழியில் சென்றுவிட்டனர். பாதியில் விட்டு சென்றாலும், இந்த வெற்றியை அடைவதற்கு, ஆரம்பத்தில், நடுவில், எந்த கட்டத்திலும் எங்களுக்கு ஆதரவு வழங்கினர். அவைகளும் இந்த வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version