மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணித்தாய் மரணம். வைத்தியசாலையில் பதற்றம்

மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக நேற்று காலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்பிணித்தாய் ஒருவர் வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்துள்ளார். இன்று மாலை இந்த இறப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. குழ்நதை பிறந்து இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து மன்னார் வைத்தியசாலையை மக்கள் சூழ்ந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலையில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலை கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாவும் மேலும் அவர் தெரிவித்துளார். அத்தோடு மக்கள் வைத்தியசாலையில் முற்றுகையிட்டு அமர்ந்துள்ளனர்.

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாய், தன்னால் இயலாமல் இருப்பதாகவும் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்குமாறு கோரியதாகவும், ஆனால் அவ்வாறு செய்யாமல் நேரம் தாமத்திதாகவும், பின்னர் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போகுமென வைத்தியர்கள் கூறியதாகவும், இறுதியில் குழந்தை பிறந்து பின்னர் இறந்த்துள்ளது. அதன் பின்னர் தாயும் இறந்துள்ளதாகவும் இறந்த பெண்ணின் தாயார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் மேலும் தகவல் வழங்கியுள்ளார்.

இது விடயம் தொடர்பில் ஆராய்ந்து முழுமையான விபரங்களை அனைவருக்கும் ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவோம் என வைத்தியசாலை பணிப்பாளர் எமது செய்தியாளருக்கு தெரிவித்துள்ளார்.

தகவல்
ரோகினி நிசாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version