புதிய சபாநாயகர் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வார் என சஜித் நம்பிக்கை

புதிய சபாநாயகர் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வார் என சஜித் நம்பிக்கை

புதிய சபாநாயகர் பாரபட்சமின்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வார் என நம்பிக்கை கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21.11) ஆரம்பமான நிலையில்
புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாகருக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

புதிய சபாநாயகரின் பொறுப்பையும் கடமையையும் அரசியலமைப்பிற்கு உட்பட்டவாறு, சட்டப்பூர்வமாக நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் முன்கொண்டு செல்வதற்கு இயலுமை கிட்டட்டும் .

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்ட கலாநிதி அசோக சபுமல் ரன்வல அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சபாநாயகராக அவருக்கு பல முக்கிய பொறுப்புகள் காணப்படுகின்றன.

சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், 225 உறுப்பினர்களும் பொது மக்கள் சேவைக்காக அவர்கள் ஆற்ற வேண்டிய சேவைகளில் தங்கள் பங்கை சரியாகச் செய்வதற்கும், புதிய சபாநாயகர் பக்கச் சார்பற்றவராகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பணியாற்ற வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version